சத்தீஸ்கர் மாநிலத்தில், ‘மஹாதாரி வந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், திருமணமான பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் நிதியுதவியை மாநில அரசு செலுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நடிகை சன்னி லியோன் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாதந்தோறும் ரூ.1,000 பரிமாற்றம் செய்யப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், அம்மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர ஜோஷி என்பவர், சன்னி லியோன் பெயரில் கணக்கு தொடங்கி, மாதம்தோறும் ரூ.1,000 பெற்று வந்தது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஒருவர் தனது பெயரில் போலி கணக்கு உருவாக்கி அரசை ஏமாற்றிய விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக பாஜக அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ‘மஹ்தாரி வந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் பணம் பெறும் பயனாளிகளில் 50 சதவீதம் பேர் போலியானவர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தனது பெயரை தவறாக பயன்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனது பெயர் மற்றும் அடையாளத்தை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், பயன்பெறவும் உருவாக்கப்பட்ட திட்டத்தில் இதுபோன்ற மோசடி நடப்பது வருத்தமளிக்கிறது. இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்கும் அதிகாரிகளின் முயற்சியை ஆதரிக்கிறேன்.