சென்னை: சமந்தா கடந்த 2 வருடங்களாக மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு நடிப்பிலிருந்து நீண்ட இடைவெளி எடுத்திருந்தார். இது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய சவாலாக இருந்தது என்று அவர் கூறுகிறார். ஆனால், அந்த கடினமான சூழ்நிலையிலும் அவர் தைரியமாக இருந்தார், குணமடைந்து இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இது அவரது வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் கூறுகிறார். இதைப் பற்றி சமந்தா கூறுகையில், “ரிஸ்க் எடுக்காமல் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் முன்னேற விரும்பினால், உங்கள் கம்போர்ட் ஜோன்ல இருக்கக்கூடாது. புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சிக்கவும். பயத்தை விட்டுவிட்டு தைரியத்துடன் சவால்களை எதிர்கொள்ளுங்கள், ”என்று சமந்தா கூறினார்.