சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலாவின் பி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
வரும் பொங்கல் பண்டிகையின் போது வணங்கான் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம், இயக்குனர் பாலா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதன் காரணமாக கோலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வணங்கான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், சூர்யா, மாரி செல்வராஜ், நித்திலன், இயக்குனர் மிஷ்கின், மணிரத்னம் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், “தீபாவளி அன்று வெளியாகும் படத்தின் கிளைமாக்ஸ் நெகட்டிவாகவோ அல்லது சோகமாகவோ இருந்தால் படம் தோல்வி அடையும் என்ற கருத்து நிலவுகிறது.
அதனால்தான் ‘அமரன்’ படத்தின் க்ளைமாக்ஸ் சோகமாக இருந்ததால் பயந்தேன். அப்போது பாலா சாரின் ‘பிதாமகன்’ படம் தீபாவளியன்று சோகமான க்ளைமாக்ஸுடன் வெளியாகி வெற்றி பெற்றதை அறிந்தேன். இந்தப் படம் என் தம்பி அருண் விஜய்க்கு இன்னொரு வெற்றிப் படமாக அமையும்” என்றார்.