மும்பை: தனது மகள் திருமணம் குறித்து நடிகர் அனுராக் தெரிவித்த தகவல் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தனது வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், அவர் மகள் ஆலியாவின் திருமணத்திற்குப் பிறகு, 10 நாட்கள் தொடர்ந்து அழுததாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய அவர் “நான் ஏன் அழுதேன் என்று எனக்குத் தெரியவில்லை, என் மகள் பிறந்தபோது ஏற்பட்ட உணர்வு அவள் திருமணத்தின் போதும் உணர்ந்தேன்” என கூறியுள்ளார்.