சென்னை: சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டி.ராஜேந்தரை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர். தலையில் முடி கொட்டிபோய் விறுவிறுவென நடப்பவர் மிகவும் பொறுமையாக நடந்து வந்துள்ளார்.
நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் நடிகர் டி.ராஜேந்தர். இவர் அவ்வப்போது சில படங்கள் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார். தனது தந்தையை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார் சிம்பு, சிகிச்சைக்கு பின் இந்தியா திரும்பியவர் அதிகம் சினிமா நிகழ்ச்சிகளில் தலைக்காட்டாமல் இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டி.ராஜேந்தரை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர். சுத்தமாக ஆளே மாறிவிட்டார், தலையில் முடி கொட்டி, விறுவிறுவென நடப்பவர் மிகவும் பொறுமையாக நடந்து வந்துள்ளார்.