சென்னை: விரக்தியில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வரும் 15ம் தேதி தெறி படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.
விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் விரைவில் தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி வரும் 15ம் தேதி அன்று ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9, நேற்று வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழக்கும் வழக்கு விசாரணை ஜனவரி 21 க்கு நேற்று தள்ளி வைக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.