சென்னை: தனுஷ் 55 திரைப்படமும் ஒரு வீரரின் கதையாகதான் இருக்கும். நம் சமுதாயத்தில் பல வெளியில் தெரியாத நிறைய வீரர்கள் அல்லது ஹீரோக்கள் உள்ளன அவர்களை பற்றிய கதையாக D55 திரைப்படம் உருவாகவுள்ளது என இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி கூட்டணியில் உருவான படம் “அமரன்.” கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான “அமரன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும், வசூலையும் வாரி குவித்தது.
அமரன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தனுஷ் நடிக்கும் 55 வது திரைப்படமாகும்.
இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. விழாவில் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ், வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ராகுமார் பெரியசாமி படத்தை குறித்த சில அப்டேட்டுகளை கூறினார். தனுஷ் 55 திரைப்படமும் ஒரு வீரரின் கதையாகதான் இருக்கும். நம் சமுதாயத்தில் பல வெளியில் தெரியாத நிறைய வீரர்கள் அல்லது ஹீரோக்கள் உள்ளன அவர்களை பற்றிய கதையாக D55 திரைப்படம் உருவாகவுள்ளது என கூறினார்.