சென்னை: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கை, சென்னை குடும்ப நல நீதிமன்றம், நவ., 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் காதலித்து கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி பரஸ்பர சம்மதத்துடன் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில், கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.
இந்நிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுபாதேவி முன்பு இன்று (அக்டோபர் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் இல்லை. இதையடுத்து, வழக்கை நவம்பர் மாதம் விசாரிக்க நீதிபதி முடிவு செய்தார். 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.