சென்னை: அம்பிகாபதி படத்தின் கிளைமேக்ஸ் காட்சி AI மூலம் மாற்றி வெளியிடப்பட்டதால் நடிகர் தனுஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ராஞ்சனா (அம்பிகாபதி) திரைப்படம் வெளியானது. இப்படமே தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமாகும்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டார். படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் ஹிட்டானது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அண்மையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஏஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்துள்ளனர். அதில் தனுஷ் கடைசியாக உயிர் பெற்று வருவதுப் போல் காட்சிகள் அமைந்துள்ளது.
இந்த புதிய கிளைமேக்ஸ் அப்படத்தின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னுடைய கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக அம்பிகாபதி படத்தின் கிளைமேக்ஸ்காட்சியை மாற்றி படத்தயாரிப்பு நிறுவனம் ரீரிலீஸ் செய்துள்ளதாகவும் இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அப்படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அம்பிகாபதி படத்தின் கிளைமேக்ஸை ஏஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்ததற்கு நடிகர் தனுஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஏஐ மூலம் மாற்றியமைக்கப்பட கிளைமேக்ஸை உடன் வந்துள்ள அம்பிகாபதி படம், என்னை முழுமையாக தொந்தரவு செய்துவிட்டது. என் கருத்தை மீறி இதை வெளியிட்டுள்ளனர். 12 வருடங்களுக்கு முன் நான் ஓகே சொன்ன படம் இது இல்லை
ஏஐ மூலம் செய்யப்படும் இவ்வகை மாற்றங்கள், சினிமாவை அச்சுறுத்துகிறது. வருங்காலத்தில் இவ்விஷயத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் தேவை” என்று தெரிவித்தார்.