சென்னை : நடிகர் தனுசை வைத்து இயக்குனர் வினோத் படம் இயக்குவது உறுதி என கோலிவுட்டில் தகவல்கள் பரவி வருகிறது.
ஜன நாயகன் ரிலீஸை தொடர்ந்து உடனடியாக தனுஷை வைத்து ஹெச் வினோத் படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் உடனான படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து ஹெச் வினோத் இயக்கப்போவதாக ஒரு தகவல் வெளியான நிலையில், அது வதந்தி என்றும் அடுத்த படத்தை தனுஷ் உடன் தான் வினோத் இயக்கவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தனுஷ்-ஹெச் வினோத் உடனான புதிய படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவின் லலித் குமார் தயாரிக்கவிருப்பதாகவும், அப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கவிருப்பதாகவும், மற்ற நடிகர்கள் குறித்த அப்டேட்டை விரைவில் படக்குழு வெளியிடும் எனவும் எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், அதை உறுதிப்படுத்தும் வகையில் ரியாக்ட் செய்துள்ளார். இந்த சூழலில் தனுஷ் மற்றும் இயக்குநர் ஹெச் வினோத் இருவரும் விரைவில் இணைவார்கள் என்பதால் தனுஷ் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர். |