அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். பி.டி.ஜி நிறுவனம் தயாரிப்பில் அருண் விஜய் நடிக்கும் படம் ‘ரெட்ட தல’. இப்படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலை வெளிநாட்டில் திரையிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

தனுஷ் பாடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் மூலம் உருவான நட்பின் அடிப்படையில் ‘ரெட்ட தல’ படத்திற்காக தனுஷ் பாடியுள்ளார்.
திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரெட்ட தல’. இதில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். கதாநாயகிகளாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்து இதனானி நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.