மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள துருவ் விக்ரம், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரது திரைப்பயணத்தில் முக்கியமான அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் கடைசியாக இயக்கிய தக்லிப் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறிய நிலையில், அவரது அடுத்த படமாக துருவ் விக்ரம் நடிக்கும் இந்த புதிய படம் உருவாகவிருக்கிறது. இதில் ருக்மிணி வசந்த் நாயகியாக நடிக்க இருப்பதாகவும், இது காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த திரைபடமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக எப்போதும் போல் ஏ.ஆர். ரஹ்மான் இருப்பார் என்றும், நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருவ் விக்ரம் இதுவரை நடித்த ஆதித்ய வர்மா, மஹான் போன்ற படங்களில் தனது திறமையை நிரூபித்துள்ளார். தற்போது எதிர்பார்ப்பு மிகுந்த பைசன் படத்தில் அவர் நடித்துள்ளதுடன், மணிரத்னம் இயக்கும் படம் அவரது கேரியரை மாறிய பாதையில் கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது.
மணிரத்னம் – துருவ் விக்ரம் கூட்டணி தமிழ் சினிமாவில் புதிய சுவாரசியத்தை உருவாக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.