By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: படத்திற்கு பணம் பெற்று விமர்சனம் செய்பவர்கள் அதிகரிப்பு… இயக்குனர் பிரேம்குமார் வேதனை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > படத்திற்கு பணம் பெற்று விமர்சனம் செய்பவர்கள் அதிகரிப்பு… இயக்குனர் பிரேம்குமார் வேதனை
சினிமா

படத்திற்கு பணம் பெற்று விமர்சனம் செய்பவர்கள் அதிகரிப்பு… இயக்குனர் பிரேம்குமார் வேதனை

Nagaraj
Last updated: July 11, 2025 8:20 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை : பணம் பெற்றுக் கொண்டு விமர்சனம் செய்வது இப்போது 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துவிட்டது. நேர்மையான விமர்சகர்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர் என்று இயக்குனர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இந்த படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளிபருவகால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இப்படத்தை 2020ம் ஆண்டில் ‛ஜானு’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்த பிரேம்குமார்,

அந்த படத்தில் சர்வானந்த், சமந்தாவை நடிக்க வைத்திருந்தார். அதன் பிறகு கார்த்தி – அரவிந்த்சாமி நடிப்பில் ‛மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கினார்.

இதையடுத்து ’96’ படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பிரேம் குமார் ’96’ இரண்டாம் பாகத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இயக்குநர் பிரேம் குமார் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தமிழ் சினிமாவில் நிலவும் எதிர்மறையான விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில் பிரேம் குமார், ” தமிழ் சினிமாவில் எதிர்மறையான விமர்சனங்கள் தற்போது பெரிய பிரச்னையாக இருக்கின்றன. அது இப்போது பெரிதாகிக் கொண்டே செல்கிறது. இன்று பல விமர்சகர்கள் இருக்கின்றனர். நான் அனைத்து விமர்சகர்களையும் இதில் சொல்லவில்லை. சில விமர்சகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்கள் பேசும் தொனி என அனைத்தும் எதிர்மறையாக இருக்கின்றன.

படம் வெளியான பிறகு முதல் வாரத்தை அவர்கள் இலக்காகக் கொள்கின்றனர். அவர்கள் ஒரு அஜெண்டாவை வைத்து இதனைச் செய்கின்றனர். ஒரு திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் படத்திற்கு வசூல் வந்துவிட்டால், தயாரிப்பாளர் தானாகவே அவருடைய அடுத்த படத்தை உங்களுக்குக் கொடுப்பார்.

பணம் பெற்றுக் கொண்டு விமர்சனம் செய்வது இப்போது 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துவிட்டது. நேர்மையான விமர்சகர்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர். நேர்மையான விமர்சகர்களிடம் ஒரு படத்தைச் சரியாக விமர்சனம் செய்வதற்குப் போதுமான திறமைகள் இல்லை. ஓரிரு நபர்களால் மட்டுமே நல்ல விமர்சனங்களைக் கொடுக்க முடிகிறது. அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களே இருக்கின்றனர்.

மீதமுள்ளவர்கள் படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்களைத்தான் பார்க்கின்றனர். இப்படியான விமர்சனங்களை வைத்து, திரையரங்குகளுக்குச் சென்று படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா என முடிவு செய்கின்றனர். இந்தப் பிரச்னையைப் பரிசீலனை செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சில விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும்” என கூறியிருக்கிறார்.

You Might Also Like

கண்டென்ட் மட்டுமே கிங்… நடிகை ராதிகா நெகிழ்ச்சி

நடிகை ஹன்சிகாவிற்கு விவாகரத்து அளித்த மும்பை கோர்ட்

தான் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குனரை அறிமுகம் செய்த சிவகார்த்திகேயன்

10 நாட்களில் அட்டகாச வசூல் வேட்டை நடத்தியுள்ள தாய் கிழவி படம்

திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்த நடிகை கோமலி பிரசாத்

TAGGED:Director Prem KumarGetting PaidMovieProducersReviewஇயக்குனர் பிரேம் குமார்தயாரிப்பாளர்கள்திரைப்படம்பணம் பெறுகின்றனர்விமர்சனம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?