96 ஹிட் கொடுத்த இயக்குனர் பிரேம் குமார் தற்போது சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மெய்யழகன் படத்தை இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் பிரேம்குமார் பேட்டியில் பல சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட 96 வெற்றிப்படம் ஏன் ஹிட் ஆகவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் சமந்தா, 96 படத்தின் ரீமேக் செய்ய வேண்டாம் என்று பேச்சு வார்த்தை தொடங்கியவுடன் தெரிவித்துள்ளார். ஆனால் பின்னர் அவரே அதில் நடிக்க வேண்டியதாயிற்று. அந்த படத்தை எடுக்கும்போது அது ஓடாது என்று தெரிந்தது. ஏனென்றால் தென்னிந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் படத்தை பார்த்திருக்கிறார்கள்” என்றார்.