‘பேரன்பு’ படத்திற்குப் பிறகு, இயக்குனர் ராம் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து அவர் இயக்கியுள்ள படம் ‘பறந்து போ’. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசை யுவன். ஜூலை 4-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது.

“மற்ற எல்லோரையும் போலவே, எனக்கும் சூரியகாந்தி பூக்கள் மிகவும் பிடிக்கும். எனது முதல் படத்திலேயே அழகான சூரிய உதயத்தின் போது சூரியகாந்தி தோட்டத்தில் படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. சூரியகாந்தி பூக்கள் கட்டுக்கடங்காத இளம் பிரியத்தின் மலராக எனக்குத் தோன்றியது. இந்த “சூரியகாந்தி” பாடல் ஒரு தந்தையின் குழந்தைப் பருவமும் ஒரு மகனின் குழந்தைப் பருவமும் இணையும் இடம்.
மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் பாடியுள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் நேரத்தில், நகரம் முழுவதும் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்கும்,” என்று அவர் கூறினார்.