இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியானபோது கொண்டாடப்படவில்லை. இருப்பினும் கடந்த சில வருடங்களாக சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனால், அனைத்துப் பேட்டிகளிலும் செல்வராகவனிடம் இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செல்வராகவன் அளித்துள்ள பேட்டியில், “ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் கொண்டாடப்படும்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. எல்லோரும் எங்கு சென்றாலும் கேட்கும் கேள்வி, ‘ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது?’ என்று தனுஷிடம் பேசி முடிவு செய்தோம்.

சீக்கிரம் அறிவித்ததுதான் செய்த தவறு. கார்த்தி இல்லாமல் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை எடுக்க முடியாது. சோழ, பாண்டியர்களின் உலகத்தை கதையில் கொண்டு வருவது கடினம். அதற்கான தயாரிப்பாளரைக் கண்டுபிடிக்க வேண்டும். அதேபோல், நடிகர்கள் படப்பிடிப்பை திட்டமிட ஒரு வருடம் தேவைப்படுகிறது. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை நானே எடுக்கவில்லை.
‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கிறது. இப்போது பட்ஜெட் குறைவாக உள்ளது. ஏனென்றால் கிராபிக்ஸ் செலவு அப்போதைய விட குறைவு. தற்போது AI தொழில்நுட்பம் வந்துவிட்டதால், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ “எளிதாக தயாரிக்கலாம்,” என்றார்.