சென்னை:
ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் படம், இந்த தீபாவளி வெளியான முக்கிய படங்களில் ஒன்றாக இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் இயக்குநர் சண்முகம் முத்துசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பைசன் மற்றும் டியூட் ஆகிய படங்களுடன் மோதியதால், டீசல்க்கு தியேட்டர்கள் குறைவாக ஒதுக்கப்பட்டன என்றும், அதிலும் பல பழைய தியேட்டர்கள் தான் கிடைத்தன என்றும் அவர் கூறியுள்ளார். “எமக்கு ஒதுக்கப்பட்டவை 100க்கும் குறைவான திரையரங்குகள். அதில் பல காலாவதியானவை,” என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் மேலும், “மக்களுக்காக நின்றோம், எம் மக்களுடன் வென்றோம். தரத்தை பிரித்து வணிகம் செய்வது தரக்குறைவான சூழ்ச்சி. எம் தலை ஒருபோதும் சாயாது,” எனவும் கூறியுள்ளார்.
டீசல் திரைப்படம் இதுவரை 50 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நேரத்தில், பைசன் 10 கோடி, டியூட் உலகளவில் 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன.