‘ட்ரான்’ என்பது ஸ்டீவன் லிஸ்பெர்கர் இயக்கிய 1982-ம் ஆண்டு வெளியான ஒரு வெற்றிகரமான அமெரிக்க அறிவியல் புனைகதை சாகசப் படம். அதன் அடுத்த பகுதியான ‘ட்ரான்: லெகசி’ 2010-ல் வெளியிடப்பட்டது.
ஜோசப் கோசின்ஸ்கி இயக்கிய இந்தப் படம், அதன் தொடர்ச்சியான ‘ட்ரான்: ஏரெஸ்’ ஆகும். ஜோச்சிம் ரோனிங் இயக்கிய இதில், ஜாரெட் லெட்டோ, கிரேட்டா லீ, இவான் பீட்டர்ஸ், ஹசன் மின்ஹாஜ், ஜோட் டர்னர்-ஸ்மித், ஆர்டுரோ காஸ்ட்ரோ, கேமரூன் மோனகன், கில்லியன் ஆண்டர்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டிஸ்னி அதன் டிரெய்லர் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியிடப்படும்.
இது இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்படும்.