சமீபத்தில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை உறுதி செய்தது. அதன் பிறகு எந்த அறிவிப்பும் வரவில்லை. மேலும், இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு உள்ளது. இதனால், அறிவித்தபடி பொங்கலுக்கு வெளியாகுமா என்ற சந்தேகம் விநியோகஸ்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனால் ‘வீர தீர சூரன்’, ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்கள் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் காத்திருக்கின்றன. ‘விடாமுயற்சி’ ரிலீஸ் குறித்த உறுதியான தகவல் வர இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்கிறார்கள். அது தெரிந்த பிறகுதான் ‘வீர தீர சூரன்’, ‘காதலிக்கா நேரமில்லை’ ஆகிய படங்கள் ரிலீஸ் தேதியை முடிவு செய்வார்கள்.
பொங்கலுக்கு ‘விடாமுயற்சி’ வெளியானால், ‘வீர தீர சூரன்’ படத்தை ஜனவரி 24-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை பொங்கல் அல்லது காதலர் தினத்துக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். இதெல்லாம் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியோடு பின்னிப் பிணைந்துள்ளது.