சென்னை: 3 நாள் முடிவில் தனுஷின் இட்லி கடை படம் செய்துள்ள வசூல் செய்துள்ள ொகை குறித்து தகவல்கள் ெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. இதில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ஆர்.பார்த்திபன், சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் என நிறைய நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஒரு இளைஞன் வெற்றியைத் தேடி நகரத்திற்குச் சென்று சாதனைகளை படைத்த பின்பு, தனது குடும்பத்தின் வேர், பாரம்பரியம் மற்றும் சொந்த ஊருக்கு திரும்பும் பயணத்தை கதைக்களமாக கொண்டு உள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி ஸ்பெஷலாக தனுஷின் இட்லி கடை படம் கடந்த அக்டோபர் 1ம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் 3 நாள் முடிவில் ரூ. 38 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.