‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’, ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கிருஷ்ணா. இதில், கிருஷ்ணா என்றால் ‘சில்லுனு ஒரு காதல்‘ என்பது அனைவருக்கும் தெரியும். படத்தின் கதையும் இசையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிருஷ்ணாவின் அடுத்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த கதைக்காக சில முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக கவின் கிருஷ்ணாவின் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு கிருஷ்ணா படத்தில் நடிக்க தேதிகளை ஒதுக்கியுள்ளார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.