பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். ‘புஷ்பா’ படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். சுகுமார் இயக்கிய இப்படம் தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் வசூல் சாதனை படைத்தது.
இதனால் தற்போது உருவாகி வரும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதிலும் ராஷ்மிகா மந்தனாதான் கதாநாயகி. டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜுன் ரூ.300 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது உண்மையாக இருந்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அல்லு அர்ஜுன்தான் என்கிறார்கள். எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் ரூ.275 கோடி சம்பளம் பெற்று அவரை அல்லு அர்ஜுன் முந்திவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.