சென்னை: கிராபிக்ஸ் பணிகள் தாமதம் ஆனதால் ஜீவாவின் ‘அகத்தியா’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடித்து வருகிறார். உலகப்புகழ் பெற்ற ‘ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ கதைக்களத்தில் உருவாகும் படத்துக்கு ‘அகத்தியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஹாரர் த்ரில்லர் படமான இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அர்ஜுன், ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் ஆனதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.