நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சியின் போது பலத்த காயம் அடைந்தார். படுத்த படுக்கையாக அவர் தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார். தன் உடல்நிலை குறித்து பேசிய அவர், “அக்., 5-ம் தேதி உடற்பயிற்சியின் போது 80 கிலோ தூக்கினேன்.
அப்போது முதுகுத்தண்டின் கீழ் பகுதியில் வலி ஏற்பட்டது. பிறகு போட்டோஷூட்டுக்கு போனேன். அப்போது வலி கடுமையாக இருந்தது. என் அடிவயிறு மேல் வயிற்றில் இருந்து பிரிவது போல் உணர்ந்தேன். இத்தகைய காயங்கள் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகும், தற்போது 6-வது வாரத்தில் இருக்கிறேன். இன்னும் 2 வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுவேன்” என்று வருத்தத்துடன் கூறினாள்.