சென்னை: திருமணம் செய்து கொள்ளாதது குறித்த தனது முடிவு குறித்து ஸ்ருதி ஹாசனின் நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், ‘திருமணம் என்ற எண்ணத்தைப் பற்றி நான் மிகவும் பயப்படுகிறேன். எனது அடையாளத்தை ஒரு சிறிய காகிதத்துடன் இணைக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.
திருமணத்தின் கொள்கைகளை நான் மதிக்கிறேன். ஆனால் அதை ஒரு சட்ட ஆவணமாக மாற்றும்போது, எனக்கு அது வேண்டாம். நான் ஒரு காலத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தேன், ஆனால் அந்த உறவின் பொருந்தாத தன்மையால் காதல் முறிந்தது.

திருமணம் என்பது இரண்டு நபர்களைப் பற்றியது மட்டுமல்ல. இது குழந்தைகளைப் பற்றியது, எதிர்கால வாழ்க்கைப் பொறுப்பு. நான் எப்போதும் ஒரு தாயாக இருக்க விரும்பினேன்.
ஆனால் ஒரு குழந்தையை ஒற்றைப் பெற்றோராக வளர்க்க விரும்பவில்லை. எதிர்காலத்தில் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது எனது விருப்பமாக இருக்கலாம்,’ என்று அவர் வெளிப்படையாகக் கூறினார்.