திருவனந்தபுரம் : நடிகர் டோவினோ தாமஸின் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் கடைசியாக பிருத்விராஜ் இயக்கத்தில் ‘எல் 2 எம்புரான்’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர், அனுராஜ் மனோகர் இயக்கும் ‘நரி வேட்டை’ படத்தில் நடித்து வருகிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் பிரியம்வதா கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சேரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சேரன் நடிக்கும் முதல் மலையாள படம் இதுவாகும். இப்படம் அடுத்த மாதம் 16ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘மின்னல்வாலா’ வெளியாகி இருக்கிறது.