விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா சாவித்ரியாக நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். தெலுங்கு இயக்குனர் ரவி கிரண் கோலா இயக்குகிறார். எஸ்.வி.சி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் டாக்டர் ராஜசேகர் வில்லனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

கிராமத்து பின்னணியில் நடக்கும் இந்த அதிரடி கதையின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. விஜய் தேவரகொண்டா தற்போது ராகுல் சங்க்ருதியான் இயக்கும் ஒரு வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் முடிந்த பிறகு தொடங்கும். இது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் தயாராகி வருகிறது.