பெங்களூர் : கொடுத்து வைத்த கல்லூரி மாணவர்கள் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எதற்காக தெரியுங்களா? எம்புரான் படத்துக்காக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் தான் இதற்கு காரணம்.
பக்கா மாஸ் படமான லூசிபரை தொடர்ந்து அதன் 2ம் பாகமான எம்புரான் உருவாக்கப்பட்டது. லூசிபரை போலவே இதிலும் மோகன்லாலை பிரித்விராஜ் கெத்தாக காட்டியுள்ளார்.
இதனிடையே எம்புரான் ரிலீஸ் ஆகும் மார்ச் 27ஆம் தேதி பெங்களூருவில் கல்லூரி ஒன்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலேஜ்னா இப்படி இருக்கனும் என்று ஒரு தரப்பினரும், சினிமாவிற்காக கல்லூரிக்கு விடுமுறை அளிப்பது சரியானது அல்ல என மற்றொரு தரப்பினரும் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர்.