விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் தற்போது லண்டனில் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். குழந்தைகளான வாமிகா மற்றும் அகாயுடன் சேர்ந்து, பொதுமக்கள் கவனத்திலிருந்து தொலைவில் இருக்க விரும்பும் இவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை சுகமாக அமைந்துள்ளது. ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் ரசிகர்களிடையே வியப்பையும் சிரிப்பையும் உருவாக்கியுள்ளது.
பெண்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ், நியூசிலாந்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர், தனது தோழியான ஸ்மிரிதி மந்தனாவுடன் சேர்ந்து கோஹ்லி மற்றும் அனுஷ்காவை ஹோட்டல் கஃபேவில்பார்த்து பேசியதாக கூறியிருக்கிறார். பேட்டிங், பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை பற்றி நான்கு மணிநேரம் பேசிய இந்த குழுவை, அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர், நேரம் மிகுந்துவிட்டதாக கூறி வெளியில் செல்லச் சொல்லியிருக்கிறார்.

இந்த சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டவுடன், “கோஹ்லியையும் வெளியே போகச் சொல்றாங்களா?” என ரசிகர்கள் வியப்பில் மூழ்கினர். ஆனால், கஃபேவிலே நான்கு மணிநேரம் பேசிய பிறகு, எந்த பிரபலரானாலும் ஊழியர்கள் நேர்மையாக சொல்லவேண்டிய சூழல் வந்திருக்கலாம் என்றும் மற்றொருபக்கம் கூறப்படுகிறது. இதுவும் ஒரு சாதாரண மனித அனுபவம்தான் என்று நெட்டிசன்கள் பதிலளிக்கிறார்கள்.
அனுஷ்கா தற்போது நடிப்பை விட, தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கோஹ்லி – அனுஷ்கா ஜோடி இப்போது பிரபல சினிமா மற்றும் விளையாட்டு உலக ஜோடிகளில் ஒன்றாக வலம்வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்வும் அவர்களின் எளிமையான வாழ்க்கை முறையை சாட்சியாக கூறுகிறது.