சென்னை: திருநங்கை வைஷ்ணவி முன்வைத்த குற்றச்சாட்டுகள் காரணமாக நடிகர் நாஞ்சில் விஜயன் மீது பெரிய சர்ச்சை எழுந்தது. இதற்கு அவர் வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளார்.
“வெளியே தலை காட்ட முடியல” என்று தொடங்கிய நாஞ்சில் விஜயன், குற்றச்சாட்டுகள் தன்னை மன உளைச்சலுக்கு தள்ளியதாக கூறினார். வைஷ்ணவி தன்னை காதலிப்பதாக சொன்னபோதும், தன்னால் ஏற்க முடியாது என திட்டவட்டமாக மறுத்ததாகவும் தெரிவித்தார். திருமணம் செய்து வைத்ததாகவும், மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து, ஆதாரம் இருந்தால் காட்டும்படி சவால் விட்டார்.

அதே நேரத்தில், “திருநங்கை என்பதற்காக வைஷ்ணவியை நான் ஒதுக்கவில்லை. அவர் முன்னேற வேண்டும் என்பதே என் விருப்பம். என் வார்த்தைகள் அவரை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்” என்றும் நாஞ்சில் கூறினார். மேலும், தனது மனைவி மற்றும் குழந்தைகளின் சந்தோஷத்தைக் கருத்தில் கொண்டு இந்த பிரச்சனையை இப்போது நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாஞ்சிலின் மனைவியும் வீடியோவில் பேசி, “என் கணவர் மூன்று லட்சம் வாங்கியதற்கான ஆதாரம் இருக்கா? அவர் தான் எப்போதும் பலருக்கு பணம் கொடுத்து ஏமாந்தவர். நாஞ்சிலும் நானும் சந்தோஷமாக வாழ விடமாட்டீங்களா?” என்று வலியுறுத்தினார். வைஷ்ணவி வட்டி வியாபாரம் செய்வார், அவர் சாட்சியமில்லாமல் பணம் கொடுத்திருக்க முடியாது என்றும் சாடினார்.
இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே கடும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.