ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி இடையே சமீபகாலமாக நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், இது விவாகரத்து நிலைமை குறித்த புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆர்த்தியை விட்டு பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த நிலையில், தற்போது மும்பையில் செட்டிலாகிவிட்டார், ஆனால் ஆர்த்திக்கு இதற்கான அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில், தான் மவுனமாக இருப்பதற்கு காரணம் குற்றமில்லை என ஆர்த்தி தனது அறிக்கையில் கூறியுள்ள நிலையில், நீதித்துறை மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், இந்த அறிக்கையை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். தனது இன்ஸ்டாகிராமில், ஆர்த்தி தனது பெயரை “ஆர்த்தி ரவி” என்று மாற்றிக்கொண்டார், மேலும் ஜெயம் ரவியின் மனைவி என்று குறிப்பிடப்பட்ட வரியை நீக்கவில்லை.
இதனால் ஜெயம் ரவியின் குடும்ப பிரச்சனைகள் குறித்து விசாரிக்கும் ரசிகர்களுக்கு புதிய கேள்வி எழுந்துள்ளது. விவாகரத்தில் உறுதியாக இருப்பதாக அவர் கூறும்போது, ஆர்த்தி தனது கணவரின் புகைப்படங்களை நீக்கியுள்ளார், ஆனால் ரவியின் பெயரைப் பற்றி வெளியிட்ட தகவலை மாற்றவில்லை. இதனால், ஆர்த்தி உண்மையில் ரவியை விட்டுக்கொடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.
வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கும் மரியாதை கூட தனக்கு வழங்கப்படவில்லை என்று ஜெயம் ரவி கூறினார். நான் எதை வாங்கினாலும் ஆர்த்தி கணக்கு கேட்கிறர். எனக்கென்று தனி வங்கிக் கணக்கு கூட இல்லை. எல்லாம் கூட்டுக் கணக்கு. ஆனால் ஆர்த்திக்கு மட்டும் 3, 4 வங்கி கணக்குகள் இருப்பதாக ரவி கூறியது குறிப்பிடத்தக்கது.