குழந்தைகளை மகிழ்விப்பதற்காக ‘மரகதமலை’ என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கற்பனை நாடகக் கதையைக் கொண்ட இந்தப் படத்தை எல்ஜி மூவிஸ் சார்பில் எஸ். லதா தயாரித்து, எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இதில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும், தீப்ஷிஹா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.
மாஸ்டர் சஷாந்த், அரிமா, மஹித்ரா, கலைகோ, தம்பி ராமையா, சம்பத் ராம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எல்.வி. முத்துகணேஷ் இசையமைத்துள்ளார். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். “இந்தக் கதையை 18-ம் நூற்றாண்டில் நடந்தது போல் உருவாக்கியுள்ளோம். இந்தப் படம் புலிகள், யானைகள், டிராகன்கள், கொரில்லாக்கள், பாம்புகள் மற்றும் குதிரைகளைக் கொண்ட ஒரு கற்பனை நாடகமாக இருக்கும்.

தற்போது விஎப்எக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம் வெளியாக உள்ளது. இதன் படப்பிடிப்புக்காக தடா காட்டுப் பகுதியில் ஒரு பிரமாண்டமான செட் அமைத்துள்ளோம்,” என்று இயக்குனர் எஸ். லதா கூறினார். இதன் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும்.