சென்னை: அவுட்டோர் ப்ரோமோஷன் பணியில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம்” படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகுமார் நடித்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.
அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வரும் ஜூலை 10 வெளியாகவுள்ள நிலையில், ஃப்ரீடம் திரைப்படத்தின் அவுட்டோர் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.