சென்னை: இந்திக்கு கல்கி. தெலுங்குக்கு பாகுபலி என்பது போல் தமிழுக்கு கங்குவா என்று சூர்யா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திஷா பதானி , பாபி தியோல் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ப்ரோமோஷன் பணிகளில் கலந்துக்கொள்ளும் போது சூர்யா ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்தார் அதில் அவர் ‘ மக்கள் கொடுக்குற இந்த அளவுக்கடங்காத அன்புக்கு நான் என்ன திருப்பி தரப்போறேன்னு தெரியல. என்னால முடிஞ்ச அளவுக்கு என்னோட உழைப்பு கொடுப்பேன். இந்த 49 வயதுலயும் கங்குவா திரைப்படத்துல 6 பேக் வச்சு நடிச்சு இருக்கேன்.
நான் முன்னாடி சொன்ன மாதிரிதான் கங்குவா திரைப்படம் ஒரு குழந்தை. அது கண்டிப்பா மக்களுக்கு பிடிக்கும். மற்ற மொழிகளுல தெலுங்கு-ல பாகுபலி, RRR, இந்திக்கு கல்கி திரைப்படங்கள் இருக்கு தமிழுக்கு கங்குவா திரைப்படம் அந்த மாதிரி அமையும். கங்குவா திரைப்படத்துல இருக்குற ஒரு உலகத்த இதுவரை தமிழ் சினிமால யாருமே கொண்டு வரல. இந்தப்படம் கண்டிப்பா ஒரு முன்னுதாரணமாகவும். ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக அமையும்” என கூறியுள்ளார்.