சென்னை: பிரபல தொலைக்காட்சி தொடர் எதிர்நீச்சல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை காயத்ரி, சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சியூட்டும் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கல்லூரியில் படிக்கும் காலத்தில், தன்னிடம் ஒரு போதை ஆசாமி மோசமான முறையில் நடந்துகொண்டதை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, லயோலா கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது, ஒருவரால் ‘ரேட்’ கேட்டுத் தொந்தரவு செய்யப்பட்டது. பலமுறை தான் மாணவி என்று தெரிவித்தபோதும், அவர் போதையால் அதை ஏற்காத நிலையில் இருந்தார். அந்த சம்பவம் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு, ஒருகட்டத்தில் மாடியில் இருந்து குதிக்கலாம் என எண்ணியதாக காயத்ரி தெரிவித்துள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்போது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வந்து காப்பாற்றியதாகவும் அவர் கூறினார்.
எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி, வெற்றிலை போட்டு நடித்த காட்சிகளில் பெரும் சிரமம் பட்டதாகவும், வாயில் புண்கள் ஏற்பட்டதாகவும் நினைவுகூர்ந்தார். ஆனாலும், அந்த வேடம் தான் இவருக்கு பெரும் புகழையும், ரசிகர்களின் அன்பையும் வழங்கியதாக அவர் பெருமையாக தெரிவித்தார். இன்று வரை ரசிகர்கள் தன்னை “ஜான்சி” எனவே அழைப்பதாகவும் அவர் சிரித்தபடி கூறினார்.
தொடர் வெற்றிக்குப் பின், குடும்பஸ்தன், மிஸ்டர் ஹவுஸ் கீப்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல், பாலிவுட் வெப் தொடரிலும் காயத்ரி நடித்திருப்பது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. Scam 1992 இயக்கிய ஹர்ஷத் மேத்தா அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது எனவும் கூறினார். தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், தடைகள் அனைத்தையும் மீறி முன்னேறியதை பெருமையாக பகிர்ந்த காயத்ரியின் இந்த நேர்காணல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.