பல ஆண்டுகளாக திரையுலகத்தில் இருந்து ஓரமாகிவிட்டாலும், மக்கள் தன்னை இன்னும் நினைவில் வைத்திருப்பது மிகுந்த நெகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாக ஜெனிலியா தேஷ்முக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான சிதாரே ஜமீன் பர் திரைப்படத்தில் ஆமீர் கானின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெனிலியா. இந்த வாய்ப்பு தனக்கு எப்படி கிடைத்தது என்பதையும், அந்த அனுபவம் எப்படி இருந்தது என்பதையும் அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஆமீர் கான் தயாரித்து நடித்த இந்த திரைப்படம் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தியேட்டர்லதான் படம் வெளியாக வேண்டும் என உறுதியுடன் இருந்த ஆமீர், ரூ. 120 கோடி வரை வழங்க தயாராக இருந்த ஓடிடி நிறுவனங்களின் வாய்ப்புகளையும் நிராகரித்தார். இதன் முடிவில் 24 நாட்களில் படம் ரூ. 155 கோடி வசூல் செய்து பெரும் வெற்றியை கண்டது.
இந்த படத்தில் ஜெனிலியாவைத் தேர்வு செய்ய ஆமீர் கானின் முயற்சிதான் காரணம். அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கை சந்தித்த ஆமீர், ஜெனிலியா தற்போது நடிக்கிறாரா என கேட்டதும், இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னாவை சந்திக்கச் சொல்லிவைத்தார். பின்னர் ஜெனிலியா ஆடிஷனில் கலந்து கொண்டு, தன்னை மீண்டும் ஒரு முறையாக சினிமா ரசிகர்களுக்குள் உறுதியாய் நினைவில் வைத்துள்ளார்.
படங்களில் பெரிதாக நடிக்காமல் இருந்தாலும், ரசிகர்கள் தன்னை மறக்காமல் நினைத்து வரும் நிலை மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தனது மகிழ்ச்சியை பகிர்ந்த ஜெனிலியா, இது போன்ற வாய்ப்புகள் வந்தால் எதிர்காலத்தில் மேலும் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களும் “ஹாசினி வா கோலிவுட்டுக்கு” என அழைப்பு விடுத்து வருகிறார்கள். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் ஹாசினி கதாபாத்திரம் அவருக்கு இன்னும் பேரழகு சேர்த்ததாக பலரும் நினைவு கூறுகிறார்கள். மோகன்ராஜா அவருக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ அழகிய சம்பவமாக ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.
சிறிய கதாபாத்திரமாயினும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஜெனிலியா, மீண்டும் திரைக்கு வரவேண்டும் என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பு நாள்தோறும் அதிகரிக்கிறது.