இசையமைப்பாளர் டி.இமான் இன்ஸ்டாகிராமில் தனது X-தள கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார். அதில், “எனது அதிகாரப்பூர்வமான எக்ஸ்-தளம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனது கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் மாற்றப்பட்டுள்ளது.

எனது கணக்கை மீட்டெடுக்க எக்ஸ்-தளத்துக்கு கோரியுள்ளேன். இசையமைப்பாளர் டி.இமானின் X-தள கணக்கு இடைநிறுத்தப்பட்டது நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் இருப்பதால், என்னைப் பின்தொடர்பவர்களுடனான தொடர்பு எனக்கு மிகவும் முக்கியமானது. எனது X-தளப் பக்கத்திலிருந்து நீங்கள் சந்தேகத்திற்குரிய இடுகைகளைப் பெற்றால், தயவுசெய்து அதைப் புறக்கணிக்காதீர்கள்.”