நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹேல் கதூரியா பிரிந்துவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஹன்சிகா தாயுடன் வாழ்ந்துவர, சோஹேல் தனது பெற்றோருடன் வசிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷன் தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார். ஹன்சிகா, குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தமிழில் ‘மாப்பிள்ளை’ மற்றும் ‘எங்கேயும் காதல்’ படங்களின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அழகும் இனிமையும் காரணமாக, “சின்ன குஷ்பு” என்ற பெயருடன் பரவலான பிரபலமடைந்தார்.
சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடித்தபோது, இருவருக்கும் இடையில் காதல் தோன்றியது. ஆனால், ஹன்சிகாவின் அம்மா அந்த உறவை ஒப்புக்கொள்ளாததால், அந்த காதல் முறிந்து போனது. பின்னர், ஹன்சிகா தனது தோழியின் முன்னாள் கணவர் சோஹேலை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போதைய பிரிவு ஏற்பட்டுள்ளது.
சோஹேலின் குடும்பம் பாரம்பரியமானது என்பதால், திருமணத்துக்குப் பிறகு ஹன்சிகாவை சினிமாவில் நடிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர். ஆனால் ஹன்சிகா தனது தொழிலில் தொடர்ந்து செயற்பட விரும்பியதால் இதுவும் காரணமாக மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை பெற வேண்டுமென்றும், குடும்ப அழுத்தங்களும் இவர்களுக்குள் தூரத்தை உருவாக்கியதாகச் செய்திகள் கூறுகின்றன.
இப்போது இருவரும் தனித்தனியாக வாழும் நிலையில், அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும், இணையத்தில் பரவும் தகவல்களுக்கு இதுவரை இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இது உண்மையா, வதந்தியா என்பதை உறுதி செய்யும் பொது அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.