மும்பை: பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அலியா பட். நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து அவரை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மும்பையில் ரூ. 250 கோடி செலவில் புதிய வீடு கட்டியுள்ளனர்.
விரைவில் அவர்கள் குடியேறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படத் துறையில் உள்ள நட்சத்திரங்கள் தங்கள் ஊழியர்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டுவதன் மூலமும், கார்கள் வாங்குவதன் மூலமும், தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுகளைக் கவனித்துக்கொள்வதன் மூலமும் உதவுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அலியா பட் தனது வீட்டு வேலைக்காரருக்கும் கார் ஓட்டுநருக்கும் செய்த பெரும் உதவி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டு வேலைக்காரருக்கும் கார் ஓட்டுநருக்கும் வீடு வாங்க அலியா பட் தலா ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார்.
தற்போது மும்பையில் ஒரு சிறந்த இடத்தில் வீடு வாங்குகிறார்கள். இந்தத் தகவல் வைரலாகி வருகிறது, மேலும் பலர் அலியா பட்டைப் பாராட்டி வருகின்றனர்.