பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ‘சீடன்’ மற்றும் ‘கருடன்’ போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவரது மேலாளர் விபின் குமார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இதனால் கோபமடைந்த உன்னி முகுந்தன், தான் தாக்கப்பட்டதாகக் கூறி காக்கநாடு இன்போபார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “நான் உன்னி முகுந்தனுடன் 6 ஆண்டுகள் பணியாற்றினேன். ‘மார்கோ’ படத்திற்குப் பிறகு, அவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர் விரக்தியடைந்தார். டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி பேஸ்புக்கில் ஒரு குறிப்பை எழுதியிருந்தேன்.
அதைப் படித்த பிறகு, ‘நீ இனி என் மேலாளராக இருக்க விரும்பவில்லை’ என்று கூறி என்னைத் தாக்கினார். அவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னைத் திட்டினார். அதற்காக நான் புகார் அளித்துள்ளேன்,” என்று அவர் கூறினார். வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.