சென்னை: ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரித்து கஜேந்திரா இயக்கத்தில் ரிஷி ரித்விக் ஹீரோவாகவும், ஆராத்யா ஹீரோயினாகவும் சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘குற்றம் தவிர்’. ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை.
எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு. கார்த்திக். ‘குற்றம் தவிர்’ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் சென்னையில் நடைபெற்றது. கங்கை அமரன் வெளியிட்டார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களாக அதிமுகவைச் சேர்ந்த இ. புகழேந்தி, ஆன்மிகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி, தொழிலதிபர் பிரகாஷ் பழனி, இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு, பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து விருதை பெற்றனர்.

பேரரசு பேசும்போது, ”பாடல் காட்சிகளைப் பார்த்தோம். ஹீரோ ரிஷியும், நாயகி ஆராத்யாவும் நன்றாக நடனமாடினர். பாடல்களைப் பாடும் போது ஆராத்யாவுக்கு சரியான உதடு அசைந்தது. ஆனால் ரிஷிக்கு சரியாக அமையவில்லை. ஹீரோயின் இடுப்பைப் பார்த்ததால், ‘லிப்பை’ப் கோட்டை விட்டார் என்றதும் சலசலப்பு ஏற்பட்டது.