ராஜ்குமார் பெரியசாமியின் ‘ரங்கூன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த இந்தி நடிகை சனா மக்புல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ படத்தில் நடித்துள்ளார். இந்தியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தோன்றி கல்லீரல் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “நான் சிறிது காலமாக கல்லீரல் அழற்சி நோயுடன் வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில், அந்த நிலை மோசமடைந்துள்ளது. இப்போது எனக்கு சிரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்க்க நானும் எனது மருத்துவரும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். எனது நோயெதிர்ப்புத் தடுப்பு சிகிச்சையும் தொடங்கப்பட்டுள்ளது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லாமல் இந்த நோய் குணமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த நோய் நேற்று வரவில்லை. நான் நீண்ட காலமாக இதனால் அவதிப்பட்டு வருகிறேன். இப்போது அது கடுமையாகிவிட்டது. ஆனால் நான் வலுவாக இருக்க முயற்சிக்கிறேன்.”