சென்னை: விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷனின் ‘லாயர்’ படத்தை ‘ஜென்டில்வுமன்’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த ஜோசுவா சேதுராமன் இயக்குகிறார். நீதிமன்ற அறையில் நடக்கும் ஒரு வித்தியாசமான வழக்கை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதையை இயக்குனர் ஜோசுவா சேதுராமன் உருவாக்கியுள்ளார்.

இந்தப் படம் இதுவரை திரையில் காட்டப்படாத நீதிமன்றத்தையும் அதன் நடைமுறைகளையும் யதார்த்தமாக பிரதிபலிக்கும் படமாக இருக்கும் என்று படக்குழு கூறுகிறது. விஜய் ஆண்டனியுடன், இந்தியாவில் பிரபலமான ஒரு நடிகையும் படத்தில் எதிர் வேடத்தில் இணைகிறார்.