சென்னை: பார்த்திபன் கனவு படத்தில் ஆலங்குயில்… கூவும் ரயில் பாடலை பாட பயந்தேன் என்று பாடகி கல்யாணி நாயர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நாம் கேட்டு ரசிக்கும் பல ஹிட் பாடல்களைப் பாடியவர் கல்யாணி நாயர். ஆனால், அவரது முகம் பலருக்கும் பரிச்சயமில்லை. இவரின் கணவரான பிரதீப் குமாரும் முன்னணி பாடகரே! இசை, குடும்பம், குழந்தைகள் என்று தன் பர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் கல்யாணி.
‘‘எனக்குப் பூர்வீகம் கேரளா. என்னுடையது இசைப் பின்னணி கொண்ட குடும்பம் இல்லை. அப்பா, ராணுவ அதிகாரி. பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, மலையாளத் தொலைக் காட்சி இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். அதைப் பார்த்து இசையமைப் பாளர் வித்யாசாகரிடமிருந்து அழைப்பு வந்தது.
அப்போது எனக்கு 15 வயது. ‘பார்த்திபன் கனவு’ படத்துக்காக ‘ஆலங்குயில்… கூவும் ரயில்’ என்ற பாடலுக்காக வரச்சொல்லியிருந்தார்கள். ஆனால், கர்னாடக இசை நன்கு தெரிந்தவர் பாட வேண்டிய பாடல் என்பதால் எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. இசைக்குழுவில் இருந்தவர்களும் பொறுமையுடன் சொல்லிக் கொடுத்தார்கள். வீட்டில் சென்று பயிற்சி எடுத்து வருமாறும் அவகாசம் கொடுத்தார்கள். ஆனாலும், எனக்கு அந்தப் பாடல் பாட தைரியமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.