பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 2003 முதல் நாட்டிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023-ல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2010-ல், அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து மணந்தார்.
15 வருட திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்தனர். அதன் பிறகு, சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை ஜனாவை மணந்தார். இந்நிலையில், சானியா மிர்சாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் தயாரிக்கப்பட உள்ளது.

2019-ல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே மற்றும் பரினீதி சோப்ரா ஆகியோர் தற்போது சானியா மிர்சாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அவரது வாழ்க்கை வரலாறு பற்றிப் பேசிய சானியா மிர்சா, “அக்ஷய் குமார் எனது வாழ்க்கை வரலாற்றில் நடித்தால் நன்றாக இருக்கும். நான் அவரது பெரிய ரசிகை. “அக்ஷய் குமார் அந்தப் படத்தில் நடித்தால் நான் அவரை காதலிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று நகைச்சுவையாக கூறினார்.