சென்னை: கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் பாடிய மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் ஒரு நேர்காணலில், ‘ரஜினி சாருடன் நான் நடித்த ‘கூலி’ படத்திற்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் பார்த்து ரசிப்பார்கள். என் தந்தை கமல் நடித்த ‘தக் லைஃப்’ படத்தின் ஒரு பாடலைப் பாட எனக்கு வாய்ப்பளித்ததற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி கூறுகிறேன்.
என் தந்தையின் படத்தில் பாடியதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். ஜூன் 5-ம் தேதி வெளியாகும் படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து ரசித்து பார்ப்பேன். ரஜினி சாருடன் பணிபுரிவது ஒரு புதிய அனுபவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

என் தந்தை கமல் படத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். அவர் கேட்டால், உடனடியாக கால்ஷீட் கொடுப்பேன்.’ கமல்ஹாசனின் இந்தி படமான ‘சாச்சி 420’ மற்றும் தமிழில் ‘ஹே ராம்’ ஆகிய படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.