‘புஷ்பா 2’ திரைப்படம் இந்திய அளவில் பெரும் வசூல் செய்து வருகிறது. ‘புஷ்பா 2’ இந்தி படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அளித்த பேட்டியில் அல்லு அர்ஜுனிடம், “பாலிவுட்டில் எந்த நடிகர் உங்களை ஊக்குவிக்கிறார்?” அதற்கு அல்லு அர்ஜுன், “கண்டிப்பாக அமிதாப் பச்சன் ஜி தான். அவருடைய திரையுலக வாழ்க்கை மிகப் பெரியது.
அவருடைய படங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறோம். அவர் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். நான் வயதாகும்போது அவரைப் போல என்னால் நடிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.” தற்போது இந்த பேட்டியை அமிதாப் பச்சன் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

அல்லு அர்ஜுனின் பேச்சு குறித்து, அமிதாப் பச்சன் தனது எக்ஸ்-தள பதிவில், “அல்லு அர்ஜுன் ஜி, உங்கள் அன்பான வார்த்தைகளால் நான் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். “எனக்கு தகுதியானதை விட அதிகமாக நீங்கள் எனக்கு வழங்குகிறீர்கள். உங்கள் பணி மற்றும் திறமைக்கு நாங்கள் அனைவரும் மிகப்பெரிய ரசிகர்கள். நீங்கள் தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்த வேண்டும். உங்கள் வெற்றிக்கு எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.”