சென்னை: ஆவடியில் நடந்த கடை திறப்பு விழாவில் கலந்து ொண்ட நடிகை காஜர் அகர்வால் கரூர் கூட்டநெரிசல் குறித்த கேள்விக்கு, எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பாக கருத்து கூற மாட்டேன். அது வேறு களம்.நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை என்றார்.
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த தெலுங்கு படமான மகதீரா இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தது.
தமிழில் நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, மாரி போன்ற படங்களில் நடித்து இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். துப்பாக்கி, ஜில்லா படத்தில் விஜயுடன் இவர் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர், தமிழில் கடைசியாக கமல் நடித்த இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். ஆனால் படத்தில் இவரது போர்ஷன்கள் இடம் பெறவில்லை.
இந்நிலையில், ஆவடி நகைக்கடை திறப்பு விழாவில் காஜல் அகல்வால் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் விஜயின் கரூர் துயர சம்பவம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பாக கருத்து கூற மாட்டேன். அது வேறு களம்.
விஜய் குறித்து பேசிய அவர், விஜயுடன் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் நடிகர் விஜயின் மிகப்பெரிய ரசிகை. தமிழ் படத்தில் மிக விரைவில் நடிப்பேன் என அவர் கூறினார்.