ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் நடிப்பது பற்றி ஸ்ருதிஹாசன் கூறும்போது, “கிறிஸ்துமஸ் தினத்தன்று கூட ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறேன். போன வருடம் தெலுங்கில் ‘கிராக்’ படப்பிடிப்பில் இருந்தேன்.
பிறந்தநாள் மற்றும் பண்டிகைகளின் போது படப்பிடிப்பு நடத்துவது நன்றாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனக்கு அவருடைய படங்கள் பிடிக்கும். அது கூலி படத்தில் நிறைவேறியுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் நடித்தது எனக்கு பெரிய அனுபவம். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள முடியும், ”என்று அவர் கூறினார்.