பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, சமீபத்தில் நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்தபோது “இசை குறித்து என்னால் எதுவும் புரிந்துகொள்ள முடியவில்லை” என கூறியுள்ளார். இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு மரியாதையாக நடிகர் கமல்ஹாசன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தனது ஆரம்ப காலங்களைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.

அவரின் பேச்சின் முக்கிய பகுதிகளில், “மெட்ராஸ் வந்தபோது இசையை கற்றுக்கொள்வது ஒரே நோக்கமாக இருந்தது. ஆனால் அப்போதும் இசை பற்றி எனக்கு தெரியாது. அம்மா ரேடியோ விற்று ரூ.400 கொடுத்தார். அதைக் கொண்டு நான் என்னுடைய பயணத்தைத் தொடங்கினேன்.
முதல் படம் ‘அன்னக்கிளி’யின் போது கூட, என்னிடம் இசை தொடர்பான அறிவு இல்லை” என கூறினார்.அவரது இந்த வாக்குமூலத்துக்கு கமல்ஹாசன் உடனே, “ஆனால் மியூசிக்குக்கு உங்களை தெரியும்” என நகைச்சுவையாக பதிலளித்தார். இதனால் அரங்கத்தில் சிரிப்பு கலகலப்புடன் நிறைந்தது.
இளையராஜாவின் இந்த பேச்சு, அவரது சாதனைகளுக்கு ஒரு சிறந்த சாட்சியாக பார்க்கப்படுகிறது. மேலும், தனது அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்ததன் மூலம், அவரது ரசிகர்களின் மனதில் கூடுதல் மரியாதையை பெற்றார்.இசையை பற்றிய அறிவில்லாமலேயே, தனது திறமையால் உலகத்தரத்திற்குப் போய் நிற்க முடிந்ததற்கு அவரது மகிழ்ச்சி வெளிப்பட்டது. இது தமிழ் திரைப்பட துறையின் வளர்ச்சிக்கும், இளையராஜாவின் பணிகளுக்கும் ஒரு முக்கிய அடையாளமாக விளங்குகிறது.